ஒரு பக்கா ரஜினி படத்தை சமகால சமூக பிரச்சினைகளை உள்ளடக்கி சொல்ல முயன்றுள்ளனர். வாழைப் பழத்தில் ஊசி சொருகுவது போல, பல விஷமத்தனமான விஷயங்களை அதி சிறந்த தொழில் நுட்பத்தில் மாஸாக காட்டிக் கொண்டே, கடைசியில் முற்போக்கு படம் போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறார் இயக்குனர் ஞானவேல்; ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முற்போக்கு கருத்துக்களை பேசி வெளியாகி இருக்கிறது வேட்டையன்.  ஜெய்பீம் படத்தின் மூலம் நல்ல சினிமா படைப்பாளியாக பேசப்பட்டவர் ஞானவேல். படம் திரையரங்குகளில் வெளியாகி ...