பிப்ரவரி-23 , 2025 அன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்த சென்னை பல்கலைக்கழக பவள விழா அரங்கில் ஓர் அரிய நிகழ்ச்சி நடைபெற்றது. கூத்துக் கலைஞர் கண்ணப்ப சம்பந்தன், பறை இசைக் கலைஞர் வேல் முருகன் ஆகிய இருவருக்கும் இவ்வாண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதானது, இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழக  பாரம்பரிய நிகழ்த்துக் கலை ஆசான்களுக்கு தரப்பட்ட  பத்மஸ்ரீ விருதுகளாகும். அந்த இரு ஆசான்களையும் கௌரவிக்கும் வகையில் நாடகக் கலைஞர் போதிவனம் பதிப்பக நிறுவனர், நண்பர் கருணா பிரசாத், ஒரு மாபெரும் ...