வீரம் செறிந்த விவசாயிகள் போராட்டம் கடந்து வந்த பாதை, உள்ளூர் அளவிலும்,உலக அளவிலும் அது ஏற்படுத்திய அதிர்வுகள், தாக்கங்கள்! மோடியின் அதிரடி வாபஸ் அறிவிப்பு நம்ப வைத்து கழுத்தறுக்கும் தந்திரமா..? ஆகிய சந்தேகங்கள் பற்றியெல்லாம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் நேர்காணல். தமிழ்நாட்டில், 60 க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் ஒன்றிணைந்து, ‘ஐக்கிய விவசாயிகள் முன்னணி’ என்ற அமைப்பு உருவாகியுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளராக, கடந்த ஓராண்டு காலமாக போராட்டத்தை வழிநடத்தி வருபவர் கே.பாலகிருஷ்ணன். பிரதமரின் திடீர் அறிவிப்புக்கான காரணம், ...
இந்த அவசர சட்டங்களும் அதிரடிச் சட்டங்களும் எதற்காக? மத்திய அரசு வேளாண்மை தொடர்பாக மூன்று அவசர சட்டங்களை பெரும் அமளிக்கிடையில் நிறைவேற்றியது. இந்த சட்டங்கள் மட்டுமல்ல இதற்கு முன் வந்த சில சட்டங்களும் வேளாண்மையை மேம்படுத்த , விவசாய வருவாயை இரட்டிப்பாக்க என்ற விளம்பர வார்த்தைகளோடு கொண்டு வரப்பட்டன. கால்நடை இனப்பெருக்க சட்டம், மின்சார திருத்தச் சட்டம் – கூட்டுறவு சங்கங்களை மேலாண்மை செய்வதற்கான மாற்றங்கள் போன்றவைகளும் இப்படியான அறிவிப்புகளுடன் தான் வந்தன – சில வெகு முன்பாகவே. பெருவாரியான மக்களின் பார்வையை ஈர்க்காமலேயே. ...