அறநிலையத் துறைக்கு முதன்மைச் செயலாளராக ஒரு பிராமணப் பெண் அதிகாரி நியமிக்கப்பட்டதை திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையின் நோக்கம், ‘அறநிலையத் துறை பார்ப்பனமயமாகிவிடக் கூடாது’ என்ற அக்கறையா? பார்ப்பன எதிர்ப்பில் வீரமணி உண்மையிலேயே நேர்மையானவரா? ஐயா வீரமணி ஆர்த்தெழுந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத் துறைக்கு முதன்மைச் செயலாளராகப் பார்ப்பன அம்மையாரா? – இந்த நியமனம் திரும்பப் பெறப்பட வேண்டும். இது வரையில் நாம் பெற்ற வெற்றியையும், சமூக மாற்றத்தையும் எக் காரணம் கொண்டும் ...
















