இந்திய விடுதலைப் போராட்டத்தின் குறியீடு வ.உ.சிதம்பரனார். வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயராக தனித்துவமாக நிலைத்து நிற்பவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை முற்றிலும் அழித்துக் கொண்டவர். பல முற்போக்கு கருத்துக்களின் முன்னோடி செயல்பாட்டாளர். நினைத்துப் பார்க்கையில் நெஞ்சுருக வைக்கும் வ.உசி குறித்த நினைவலைகள்; மலையளவு பங்காற்றிய சிதம்பரனாரின் தியாகத்துக்கு கிடைத்த புகழ் வெளிச்சமோ திணையளவே. தொழிலாளர் வகுப்பினர் அரசியல் மையப்படுத்தப்படுவதை இவருக்கு பின்னால் வந்த அன்னிபெசண்டும், காந்தியும், காங்கிரசில் உள்ள மிதவாதிகளும் விரும்பாத நிலையில் வ.உ.சியின் மகத்தான தொழிற்சங்க முன்னெடுப்புகள் முக்கியத்துவம் பெறாமல் ...

‘அந்நிய நாட்டு தொழில் நிறுவன வளர்ச்சிக்கு துணை போகாதே! இந்த நாட்டுக்கு தேவைப்படும் அனைத்தையும் நமது மூலதனத்தை கொண்டே உற்பத்தி செய்ய வேண்டும். தொழிலாளர்களை வாழ்வித்து தொழில்களை வளர்க்க வேண்டும்’ என்ற லட்சியத்திற்காக தன்னையே அர்ப்பணித்து வ.உ.சி பெற்ற இன்னல்கள் தான் எத்தனை; பண்டைய இந்தியாவின் செல்வச் செழிப்புக்கு முக்கிய காரணமாக விளங்கியது இந்திய நாட்டின் கலைகளும், கைத்தொழில்களுமே . இந்தியத் தொழில்களில் தயாரான வினை முற்றிய பொருள்களும் முத்து, நறுமணப் பொருட்கள் ,சாயங்கள், இலவங்கம், மிளகு, சர்க்கரை முதலிய விளைபொருட்கள் இந்தியாவிலிருந்து பல ...