இன்னும் ஒரு தொழிற்சங்கப் பதிவைக் கூட பெற முடியாத சுதந்திரம் தான் நமக்கு கிடைத்துள்ளது. 38 நாட்கள் போராட்டம் முடிந்ததென அரசாங்கம் தன்னிச்சையாக அறிவிக்கிறது. அந்நிய நாட்டு நிறுவனத்திற்கு தொழிலாளர்களை அடிமை பத்திரம் எழுதிக் கொடுக்க எதற்கு அரசாங்கம்..? ஒரு தொழிற்சங்கத்தை பதிவு செய்து அங்கீகாரம் தர முடியாத கையறு நிலையில் அரசாங்கத்தையே ஒரு அந்நிய நிறுவனம் கட்டுப்படுத்தும் என்றால், நாம் பெற்றது சுதந்திரம் தானா? சுதந்திர இந்தியாவிற்குள் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டைக்குள் அமைந்துள்ள தென்கொரிய நாட்டைச் சேர்ந்த சாம்சங் மின்னணுச் சாதன உற்பத்தி ...