”பாஜக மாபெரும் வெற்றி பெறும். அதையடுத்து பங்கு சந்தை தாறுமாறாக உயரவுள்ளது. ஆகவே, வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்” என மோடியும், அமித்ஷாவும் அறிவித்த இரண்டே நாளில் சுமார் 30 லட்சம் கோடிகளை பங்கு சந்தையில் மக்கள் இழந்ததன் பின்னணியில் நடந்தது என்ன? ஆதாயம் அடைந்தவர்கள் யார்..? பங்கு சந்தை ஜூன் 3 ந்தேதி செயற்கையாக ஒரு ஏற்றம் கண்டது. தேர்தல் முடிவு வெளியான ஜூன் 4 அன்று மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்தது! இதனால் பல சிறு முதலீட்டாளர்கள் பணம் இழந்தது  குறித்து ராகுல்காந்தி ...