வெளிநாட்டு முதலீடுகள் தமிழ் நாட்டிற்கு என்ன நன்மைகள் செய்தன? என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தின..? மனம் திறந்து விவாதிப்போம். வெளிநாடுகளில் முதலீடு செய்யும் அளவுக்கு தமிழர்களில் பலரே வளர்ந்துள்ள சூழலில், வெளி நாட்டு நிறுவனங்களுக்காக நாம் இவ்வளவு இழப்புகளை ஏற்க வேண்டுமா? தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு 17 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அமெரிக்காவில் தொழில் நிறுவன தலைவர்களைச் சந்தித்து முதலீடு செய்ய அழைப்பு விடுப்பதோடு, ஒப்பந்தங்களில் கையெழுத்தும் போட்டு வருகிறார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் ...