கொஞ்சம் ரிலாக்ஸாக இருங்களேன்..! விஜய்க்கு ஏன் இவ்வளவு ‘அட்டென்சன்’ தர்றீங்க..! மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லைம்பாங்க. அதைப் போல விஜய் சும்மா இருந்தாலும், மீது நாளும் பொழுதும் ஆளாளுக்கு பாய்ந்து, பாய்ந்து கடுமையான விமர்சனங்களை வைத்து தாக்கித் தள்ளுகிறார்கள்…! நடந்துவிட்டது ஒரு அசம்பாவிதம்! அதில் இருந்து  தற்போது மீண்டாரா விஜய் …? என்பதே தெரியவில்லை. அநியாயத்துக்கு அரண்டு கிடக்கிறார். மூன்றாவது நாள் ஒரு வீடியோ போட்டதோட சரி. அதுக்கு பிறகு பேச்சு, மூச்சே இல்லை. ஆனால், நாள் தோறும் என்று சொல்வதைவிட நாளும், ...