சுலபத்தில் அணுக முடியாதது, பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது, மக்களின் போராட்டங்களை பொருட்படுத்தாமல் அழகாக வலம் வருவது, பார்ப்பன லாபியையும் , ஊடக லாபியையும் பக்காவாக செய்வது, குடும்ப அரசியலை தயக்கமின்றி செய்து, கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது ..என ஸ்டாலின் பாணி அரசியலின் சாதனைகளை பார்ப்போம்; முதலமைச்சர் என்பவர் அழகுப் பதுமையாக வலம் வரக் கூடியவர், ஆராதனைக்குரியவர், யாருமே சுலபத்தில் அணுக முடியாதவர்.. என்ற தோற்றத்தை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை விடவும் ஒருபடி வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டி வருகிறார், ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக செயல்படும் விதம் நிச்சயம் ...