பாஜக அரசு எள் என்றால், எண்ணெய்யாகி நிற்கிறது திமுக அரசு! ”இயற்கையை அழிக்கும் திட்டம் எதையும் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்” என சொல்லிக் கொண்டே மறைமுகமாக அனைத்துக்கும் ஆதரவு அளித்து வருகிறார் ஸ்டாலின்! இந்த வகையில் டெல்டாவை தீர்த்துக் கட்டும் மத்திய அரசு திட்டங்கள் வேகம் பெறுகின்றன! முதல்வர் ஸ்டாலின், விவசாய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சுற்றுச் சூழல் அமைச்சர் மெய்யநாதன் அனைவரும் பொய் பேசுவதில் வித்தகர்களாக உள்ளனர்! இன்றைய சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்; நிலக்கரி சுரங்கம் குறித்த செய்தியை கேள்விப்பட்டதும் அதிர்ச்சி ...
அகங்காரம், அரைவேக்காட்டுத்தனம், வெறுப்பு, வன்மம் இதையே அரசியல் வழிமுறையாகக் கொண்ட அண்ணாமலையின் அருவெறுக்கதக்க அரசியலும், அடிமேல் அடி விழுந்தாலும் அமைதி காத்து, சுயமரியாதையை தொலைத்து பதவி சுகத்தையே குறிக்கோளாகக் கொண்ட ஸ்டாலினின் அடிவருடி அரசியலுமாக தமிழகம் அதகளப்படுகிறது! பாஜகவின் மீதான மக்களின் குறைந்தபட்ச மரியாதையைக் கூட குழி தோண்டிப் புதைப்பவராக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்! எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வது, எதை வேண்டுமானாலும் பேசிவிடுவது, பேசிய அபத்தங்களுக்கு வண்டி வண்டியாக நியாயம் கற்பிப்பது என அரைவேக்காட்டு அரசியலின் அடையாளமாக அண்ணாமலை திகழ்கிறார்! தடாலடியாக பேசுவது, ...
80 வயது துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும், 70 வயது ஸ்டாலினும் தான் மீண்டும், மீண்டும் பொறுப்புக்கு வர முடியுமா? 90 சதமான நிர்வாகிகள் அதே பழைய முகங்களா? புதியவர்கள் யாவரும் வாரிசுகளா? எனில், கட்சிக்கு முதியோர் முன்னேற்றக் கழகம், இளைஞர் அணிக்கு வாரிசுகள் வளர்ச்சிக் கழகம் என்பதே சரியாகும்! நடப்பது நல்லாட்சியாம்! தமிழகத்தை திமுக தான் நிரந்தரமாக ஆளப் போகிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லையாம்! இதில் திமுகவினரை விட மக்கள் உறுதியாக உள்ளனராம்! கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம்! இது தான் ஸ்டாலினின் ...
அடி பணியாத மனோபாவம், அடிமைச் சிறுமதியாளர்களிடம் இருந்து விலகி நிற்கும் தனித்துவம், திராவிட கொள்கைகளில் உறுதிப்பாடு போன்ற இயல்புகளுடைய பி.டி.ஆர். தியாகராஜனுக்கும் திமுக தலைமைக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவுகிறது என்றாலும், அது இந்த அளவுக்கு மோசமாக போகுமா என்பது அதிர்ச்சியளிக்கிறது. பி.டி.ஆர் ஒரு செயல்வீரர், ‘சொல்லுக்கும், செயலுக்கும் அதிக இடைவெளி கூடாது’ என செயல்படுபவர். மேலை நாட்டுக் கல்வி கற்றவர் மட்டுமல்ல, அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் தனியார் நிறுவனங்களில் உயர்பதவிகள் வகித்தவர். அந்த வகையில் சுதந்திரமான சிந்தனை கொண்டவர். அடிமை அரசியலை அறியாதவர், விரும்பாதவர்! ...
உலக பணக்காரர் பில்கேட்சை பின்னுக்கு தள்ளி முன்னேறிக் கொண்டு வருகிறார் அதானி! இந்த வகையில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகமாக கால்பரப்பி வருகிறது அதானி குழுமம். கடந்த பத்தாண்டுகளில் அதன் ஆக்டோபஸ் கரங்களில் தமிழகம் சிறிது சிறிதாக செல்வது குறித்த ஒரு பார்வை! டெலிகாம் துறையில் புதிதாக நுழைந்த அதானி நிறுவனம் 26 Ghz அளவிலான 5ஜி ஸ்பெக்ட்ரத்தை வாங்கிவிட்டது. தமிழ்நாடு, குஜராத், மும்பை, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கான 5ஜி ஸ்பெக்ட்ரத்தை அதானி வாங்கியுள்ளது. ஏற்கனவே பி.எஸ்.என்.எல் அழிவின் பின்னணியில் அம்பானியின் ...
சர்ச்சைக்குரிய வகையில் பேசி சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் செய்யும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்கொள்வதில் ஏகத்துக்கும் தடுமாறுகிறது திமுக அரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை அதன் சொந்த மண்ணிலேயே அதிகாரமற்றதாக்கி, தனி ராஜ்ஜியத்தை நடத்துகிறார் ஆளுநர்! ஒன்றா, இரண்டா? நாளும்,பொழுதும் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் எல்லாம் கிட்டதட்ட கலவரத்தை தூண்டும் வகையில் பேசிக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி! ஒரு கல்விச் சூழலில் அன்பை விதைக்கும் வார்த்தைகளை, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் செய்திகளை, கருத்துக்களை பேசி உற்சாகப்படுத்துவது தான் சிறப்பு விருந்தினரான அவர் ...
ச.முருகன், தண்டையார்பேட்டை,சென்னை பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கொலைகாரனை விடுதலை செய்வதா என ஒரு தரப்பினர் கொந்தளிக்கின்றனரே? 31 வருட நெடிய சிறைவாசம் என்பது தூக்கு தண்ட்னையை விடக் கொடியது! எந்தக் குற்றவாளிக்குமே இது போன்ற மிக நீண்ட சிறைவாசம் என்பது ஏற்புடையதன்று! அது சிறையின் நோக்கத்தையே சிதைத்துவிடும்! ஒருவரை விடுதலை செய்வதால் இந்த சமூகத்திற்கு எந்த பாதிப்புமில்லை என்ற அளவுகோலே போதுமானது! எம்.ராதிகா, தேனீ சில அரசியல் கட்சிகள் மொழி, சாதி, மதம் ஆகியவற்றைக் கொண்டு அரசியல் ஆதாயம் பார்க்கின்றனர் என்கிறாரே பிரதமர் மோடி? ...
ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அராஜகம், கொலை வழக்கு உள்ளிட்ட எதிலும் திமுக ஆட்சியில் ராஜேந்திர பாலாஜி மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், ஒரு சீட்டிங் வழக்கிலே கைது செய்யப் போனார்களாம், தப்பித்துவிட்டாராம்! என்ன நடக்கிறது இந்த ஆட்சியில்? கமிஷன் , கலெக்ஷன், கரப்ஷன் ஆகிய மூன்றையும் மூச்சாகக் கொண்டு செயல்பட்ட அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஊழல்களைப் பற்றி சி.ஏ.ஜி. எனப்படும் மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கையே துல்லியமாக அம்பலப்படுத்தியுள்ளது. ஏழை, எளிய பால்விவசாயிகளையும், அடிநிலைத் தொழிலாளிகளையும் சுரண்டித்தான் பல நூறு கோடி சொத்து ...