ஸ்ரீமதி மரணித்து 42 நாட்களாகிய நிலையில், இது வரை எந்த சிறிய முன்னேற்றமும் காவல்துறை விசாரணையில் இல்லை. மாணவி மரணத்திற்கான சிபிசிஐடியின் விசாரணை விபரங்கள் நீதிமன்றத்திற்கே தெரிவிக்கவில்லை. காவல் துறையின் கைகள் கண்ணுக்கு தெரியாத ஒரு அதிகார மையத்தால் கட்டப்பட்டு உள்ளதோ…? முதலமைச்சர் ஸ்டாலினின் நேரடி அதிகாரத்தில் தான் தமிழக காவல் துறை உள்ளது. சைலேந்திரபாபு தமிழக டிஜிபியாக உள்ளார். முதலில் பள்ளிக் கூடத்திற்கு ஆதரவாக வெளிப்படையாகவே கருத்துச் சொன்ன டிஜிபி. சைலேந்திரபாபு மக்களின் பெருங் கோபத்தை அடுத்தும், அடுத்தடுத்து வெளி வரும் தகவல்களையடுத்தும் ...