நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் முன்னுரையில் நமது நாடு “ஜனநாயக குடியரசு – Democratic Republic” என்று குறிப்பிட்டுள்ளது; ஆனால், நீதித்துறையின் சுதந்திரமே இன்று சவாலாக உள்ளது. இன்னும் இங்கு பெண்களுக்கும், சாதியில் கீழடுக்கில் உள்ளோருக்கும் சம வாய்ப்பு உள்ளதா?மாநில அரசுகள் சுயாதீனமாக செயல்பட முடிகிறதா..? ஹரிபரந்தாமன் அறச் சீற்றம்; 1946–49 காலகட்டம் மிகுந்த குழப்பங்களும் அசாதாரண சூழல்களும் நிறைந்தது. 1946 -ல் அரசியல் அமைப்பு வரைவுக் குழு அமைக்கப்பட்ட போது, நாடு பிரிவினையை எதிர்பார்க்கவில்லை. 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் ...













