கேட்கும் போதே இன்பத்தேன் வந்து பாய்வது போலத் தான் இருக்கிறது! ”தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது” என அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையைத் தான் சொல்கிறேன். ”இதற்கும் மேலாக அவர் இது முதல்வர் ஸ்டாலினின் உறுதியான கொள்கை முடிவாகும்…”என்று கூறியுள்ளது மகிழ்ச்சியில் நம்மை திக்குமுக்காடச் செய்கிறது…! ஆனால், கொஞ்சம் நிதானித்து, இது வரை நடந்தவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, அச்சம் ஏற்படுகிறது. ஏழு மாதங்களில் தேர்தல் நெருங்கி வருகையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது நாள் வரை தமிழகம் ...