இந்த ஆண்டு (2026) இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்காக ஹோம்பவுண்ட்’ படத்தை அனுப்பியுள்ளனர்! முக்கியத்துவம் வாய்ந்த சமகால உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து – சாதி, மத தாக்கத்தை கடந்து – இரு இணைபிரியா நண்பர்களின் நட்பினூடாக –உருவான இந்த கலைப் படைப்பு சமூகத்திற்கு தரும் செய்திகள் நுட்பமானாவை; 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது, நூற்றுக்கணக்கான மைல்கள் கால்நடையாகத் தங்கள் ஊருக்குப் பயணம் செய்த இரு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது ஹோம்பவுண்ட் திரைப்படம்! ‘மசான்’ (Masaan) திரைப்படத்தின் ...











