இப்படியும் ஒரு மனிதன் இருக்கமுடியுமா? என்று வியக்க வைக்கிறார் உடுமலை செந்தில்! கோவை உடுமலையை பூர்வீகமாகக் கொண்ட செந்திலுக்கு சிறுவயது முதலே நாட்டியத்தை தவிர வேறொன்றும் தெரியாது! அதிலும் கோயில்களில் ஆடுவதென்றால் அலாதி ஆர்வம்! உடுமலை பாகவதர்,முத்துசாமி பிள்ளை,கணபதி ஸ்தபதி அகியோரிடம் நாட்டிய சாஸ்த்திர மரபுகளை நன்கு கற்று உள்வாங்கிய செந்தில் அந்த நாட்டியக் கலையை, மரபின் தொடர்ச்சியான மக்கள் கலையாக வளர்த்தெடுப்பதில், நடைமுறைப் படுத்துவதில் பேரார்வம் கொண்டவராக உள்ளார்! கடந்த முப்பதாண்டுகளாக நாட்டியமே மூச்சு என்று வாழும் செந்தில், நமது மரபில் கோவில்களில் ...