சுதந்திர இந்தியா எவ்வாறு கட்டமைக்கப்பட்டது? நேருவின் ஆளுமை எப்படிப்பட்டது? இந்திரா காந்தி செயல்பட்டவிதம், இந்திய அரசியல் கட்சிகளின் இயங்கு தன்மை, இந்தியாவை மற்றொரு மதவாத பாகிஸ்தானாக்க துடிக்கும் பாஜகவின் செயல்பாடுகள் என அலசுகிறார் சுனில் கில்நானி. சுதந்திர இந்தியாவின் ஐம்பது ஆண்டு வரலாற்றை, ஒரு புதிய கோணத்தில் அணுகியுள்ளார் சுனில் கில்நானி. தற்போது அசோகா பல்கலைக் கழகத்தின் அரசியல் வரலாற்றுத்துறை பேராசிரியராக உள்ளவரான சுனில் கில்நானி, லண்டன் கிங்ஸ் கல்லூரியின் இயக்குனராக இருந்தவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர் மற்றும் விமர்சகர். இந்த நூலை மேலோட்டமாக ...