உள்ளாட்சி நிர்வாகத்திலும், நீதி விசாரணையிலும் சோழர்கள் முன்னோடியாக விளங்கினர். கிராம  பொருளாதார மேம்பாட்டிற்காக நிலமில்லா விவசாயிகளுக்கான “சாவா மூவா  பேராடு” திட்டத்தை நடைமுறைப் படுத்தினான் இராஜராஜ சோழன். இந்த திட்டம் சுவாராசியமானது பேரரசன் இராஜ ராஜனின் வியத்தகு வரலாற்று உண்மைகளை உள்ளடக்கிய ” பொன் மான் பயந்த புலி” என்ற நூலை முனைவர் பா. இறையரசன், வரலாற்றறிஞர் தஞ்சை கோ.கண்ணன் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இந்த நூலுக்கு முனைவர் பொற்கோவும், முனைவர் மு.ராஜேந்திரனும்  அணிந்துரை தந்துள்ளனர். இந்த நூல் வெளியீட்டு விழா ஜனவரி 16 ...