கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவல் இன்றும் பரவலாக பலரால் விரும்பி வாசிக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்தினம் இதை பிரம்மாண்ட திரைப்படமாக எடுத்து வருகிறார். ஆனால், இந்த நாவலில் உள்ள இந்துத்துவக் கூறுகளும், பிராமணப் பெருமிதங்களும் ஆபத்தானவை என்கிறார் ஆய்வாளர் பொ.வேல்சாமி. தமிழகத்தின் 10ஆம் நூற்றாண்டு கால சோழப் பேரரசு பற்றியும், அக்கால வாழ்க்கை முறை,  சமூகம், கலை, கலாச்சாரம், இயற்கை வளம், போர் முறைகள் அனைத்தையும் கற்பனை வளத்துடன் பிரதிபலிக்கும் நாவல் தான் கல்கியின் பொன்னியின் செல்வன்! 1999-ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி ...