வெற்றிச் செல்வி, மனநல ஆலோசகர், சென்னை. தமிழகத்தில் ,தமிழ் தேசியம் ஆட்சி செய்யும் காலம் வருமா ஐயா.? தமிழகத்தில் முதன்முதலாக தமிழர் கழகம் உருவாக்கியவர் தமிழ்தாத்தா கி.ஆ.பெ.விசுவநாதம்! காங்கிரஸிலிருந்த பெரியாரை நீதிக்கட்சிக்கு அழைத்து வந்த கி.ஆ.பெ, இருபதாண்டுகள் பெரியாரோடு இணைந்து களம் கண்டவர்! பெரியாரும், அண்ணாவும் திராவிடர் கழகம் தொடங்கியதால் கருத்து மாறுபட்டு தமிழர் கழகம் உருவாக்கினார்! மாபெரும் தமிழ்ப் போராளியும்,முத்தமிழ் அறிஞருமான கி.ஆ.பெ.விசுவநாதத்தின் தமிழர் கழகம், இந்திய தேசியத்திற்கு அனுசரணையான தமிழ் தேசியத்தை பேசிய சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் தமிழரசு கழகம்..ஆகியவற்றால் தமிழ்நாடும், ...