உண்மையான இந்தியா கிராமங்களில் தான் “வாழ்கிறது” என்று சொன்னார் மகாத்மா காந்தி. ‘அப்படியெல்லாம் நிம்மதியாக வாழவிடுவதாவது’ என்று கங்கணம் கட்டி, கிராமப்புற ஏழைகளுக்கு வாழ்வளிக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்றி உள்ளனர்! பெயரில் என்ன இருக்கிறது..? பெயரில் ‘எல்லாம் இருக்கிறது’ ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்’ என்ற பெயரை, ‘வளர்ந்த பாரத கிராமிய வேலை மற்றும் வாழ்வாதாரத் திட்டம்’ – என்று மாற்றுவதற்கான சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் டிச.16,2025 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சில ஊர்களுக்கும், ...











