மத்திய பாஜக அரசு இருக்கிற தொழிலாளர் நலச் சட்டங்களை தூக்கி குப்பையில் எறிந்துவிட்டு, புதிய தொழிலார் சட்ட மசோதாவை விவாதமின்றி, அவசர,அவசரமாக கொண்டு வந்து பாராளுமன்றத்தில் விவாதத்திற்கே வைக்காமல் நிறைவேற்றியுள்ளது.இதனால் இது நாள் வரை தொழிலாளர்கள் பெற்று வந்த உரிமைகளும்,பாதுகாப்பும் இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளது. 1880 களில் அமெரிக்கா தொடங்கி ஒவ்வொரு நாட்டிலும் நாளொன்றுக்கு 12 மணி நேரம், அல்லது 10 மணி நேரம் பணியாற்ற முடியாது என்று ரத்தம் சிந்தி, பல உயிர்களை இழந்து,போராடிப் பெற்றதே எட்டு மணி நேர வேலை ...