கெளரி லங்கேஷ் படு கொலையை மையமாக்கி ஒரு அரசியல் படத்தை புதிய கோணத்தில், புதிய தளத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் இந்து! இவர் மலையாள சினிமாவின் இன்னொரு நம்பிக்கை நட்சத்திரம். ஒரு மக்களுக்கான படைப்பாளி இறந்த பிறகு தன் படைப்பால் வாழுவதை உயிர்ப்போடு சொல்கிறது படம்! மலையாளத்தில் வெளியாகி இருக்கும் 19(1)(A) திரைப்படம் வலுவான திரைமொழியோடும் தீவிரமான அரசியல் படமாகவும் வந்திருக்கிறது. விஜய்சேதுபதி, நித்யாமேனன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குனர் வி. எஸ். இந்து. எளிய நீரோடையைப் போன்ற கதை. முக்கிய ...












