‘கம்யூனிஸ்டுகள் என்றால் போர் குணம் மிக்கவர்கள்’ என்ற அடிப்படைப் பண்பில் இருந்து அவர்கள் வெகு தூரம் விலகிச் சென்றுவிட்டார்கள் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடை பெற்ற விதமும், மாநாட்டின் தீர்மானங்களும் பறை சாற்றுகின்றன. ‘திமுக விசுவாசம்’ தான் மிகவும் தூக்கலாக வெளிப்பட்டுள்ளது; கடந்த காலங்களில் பாதிக்கப்படும் எளிய மக்களின் பாதுகாவலனாக அறியப்பட்டு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்றைய திமுக அரசின் பாதுகாவலர்களாக தாங்கள் இருப்பதை வெளிப்படுத்துவதற்காகவே ஒரு மாநாடு நடத்தியது போல உள்ளது. சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ...













