சிபி, பேரளையூர், கடலூர் ”இந்து விரோதி” என்ற பாசகவின் விமர்சனத்திற்கு ஸ்டாலின், ‘தன் கட்சியில் பெரும்பான்மை இந்துகள் தான்’ என்றார். மம்தா, ”மதத்தை வைத்துப் பிரிவினை முடியாது” என்கிறார். இது குறித்து.? திமுக இந்துக்களை தாஜா செய்யக் கூடிய கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது என்றாலும், அது ஒரு போதும், சிறுபான்மையினரை தாக்கும் கட்சியாக மாறாது. ”மதத்தை வைத்து பிரிவினை முடியாது” என்ற மம்தாவே கூட மேற்குவங்கத்தில் ராமரை முன்னிறுத்திய பாஜகவிற்கு மாற்றாக துர்க்கையை அடையாளப்படுத்தும் அரசியலைk கையில் எடுத்தார் என்பதே யாதார்த்தம்! மருதமலை மகேஷ், ...