சட்டம் நீதி என்பவையெல்லாம் செல்வாக்கானவர்களுக்கு ஒன்றாகவும், செல்லாக் காசாக புறந்தள்ளப்பட்ட எளிய மக்களுக்கு ஒருவிதமாகவும் தான் இருக்கிறது என்பதற்கு 75 வயதை கடந்து 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன், ஆண்டியப்பன்,பெருமாள், ஞானப்பிரகாசம், மீசைக்கார மாதையன் ஆகிய ஐவரே உதாரணமாகும்! ராஜிவ்காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எழுவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து கவனப்படுத்தவாவது தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் லாபி இருக்கிறது. இவர்களுக்கோ அதுவும் இல்லை…! தவறு செய்தவர்கள் யாரும் தண்டிக்கப்பட வேண்டும் ஆனால், தண்டணையானது கால ...