’’அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த அளவாவது ஒரு வாய்ப்புக்கு உத்திரவாதம் கிடைத்ததே’’ என ஆறுதல் பெற முடியாத அளவுக்கு இதில் பல சந்தேகங்கள்,குழப்பங்கள்… நிறைந்துள்ளன! மேலும் இதன் பின்னணியில் உள்ள அரசியல் கணக்கு மிகவும் அபாரமானது! இதில் வெற்றி பெற்றது சமூக நீதியா? சாதுரியமான பாஜகவின் அணுகுமுறையா? யாருமே எதிர்பார்த்திராத வகையில் தமிழக அரசு நேற்று ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல்  அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவிகிதத்தை அவசரச் சட்டம் கொண்டு வந்து அறிவித்தது! ’’இதன் பின்னணியில் என்ன நடந்தது?’’ என்ற நமது விசாரணையில் தெரிய வந்ததாவது; # 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ...