இதற்கே இப்படி அரண்டு போனால் எப்படி? என்ன நடந்துவிட்டது என்று பாஜகவினர் பதைபதைத்து நீதிமன்றம் சென்றனர்..? நீட் தேர்வால் பாதிப்பே கிடையாதாம்! பாதிப்பே இல்லை என்றால், ஏன் நீங்கள் பாய்ந்து தடை கேட்க வருகிறீர்கள்..? ஏழை எளிய மாணவர்களுக்கு இதில் என்ன பாதிப்பு? என்று ஆராய்ந்து உண்மை சொல்வதற்கு தானே நீதிபதி தலைமையில் குழு அமைத்துள்ளனர். பாதிப்பே இல்லை என்று நீங்கள் நீதிபதி குழுவை சந்தித்து விளக்கம் சொல்லுங்கள் அல்லது விரிவாக மனு கொடுங்கள். அதைத் தானே செய்ய வேண்டும்! கடந்த சில நாட்களாக ...

‘’ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு கமிஷன் போட்டால் சரியாயிடுமா..?’’ ‘’இந்த நாட்டுல எவ்வளவு கமிஷன்கள் போட்டு இருக்காங்க..! அந்த கமிஷன் அறிக்கைகளைக் கூட வெளியிடாமால் அரசாங்கம் வாங்கி வைத்துக் கொள்வதெல்லாம் நடந்திருக்குதே..!’’ ‘’கமிஷன் அறிக்கையை வாங்கி மத்திய அரசுக்கு அனுப்பத் தான் முடியும். அதை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாதே!’’ ‘’அப்ப என்ன சார் இது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாக இருக்குமா..?’’ இப்படியான சந்தேகங்கள் பல தரப்பில் இருந்தும் எழுப்பப்பட்டு வருகின்றன! மேற்படி சந்தேகங்களை எழுப்புவதற்கான கடந்த கால கசப்பான அனுபவங்கள் பல ...