கனிவும், பணிவும், கர்வமில்லா மென்மையாளருமான ஏ.ஆர்.ரகுமானை அவரது மனைவி பிரிந்து செல்வதானது சமூகத் தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் விவாகரத்து ஆச்சரியமானதல்ல என்றாலும், நமது பேரன்புக்குரிய ஒழுக்க சீலரான ரகுமான் விஷயத்தில் நடந்திருப்பது குறித்த ஒரு நுட்பமான அலசல்; குடும்பம் என்ற அமைப்பே சமீப காலமாக கேள்விக்கு உள்ளாகி வருகிறது. எங்கெங்கு பார்த்தாலும் விவாகரத்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. குடும்ப நீதிமன்றங்களில் வழக்குகள் குவிகின்றன. குடும்பங்களில் நிம்மதி பறி போவது சமூக இயக்கத்தையே பாதிக்கும் என்பதால், இது குறித்த பரந்துபட்ட விவாதங்கள் தேவைப்படுகின்றன. ...