நெஞ்சைப் பிளக்கும் கோர விபத்துக்கள் இல்லாத தீபாவளி என்பது கடந்த கால் நூற்றாண்டாக ஒரு நிறைவேறாத கனவாகவே தொடர்கிறது. எதைத் தவிர்த்தால்.., இந்த கோர விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும் என அலசுகிறது இந்தக் கட்டுரை! சடசடவென்ற வெடிச்சத்தங்கள், கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளம்.. இல்லாத தீபாவளியை நினைத்துக் கூட பார்க்கமுடியாத ஒரு நிலைக்கு சமூகம் வந்துவிட்டது. ஆனால், விபத்துகள், உயிரிழப்புகள் இல்லாத தீபாவளியை நம்மால் ஏன் சாத்தியப்படுத்த முடியவில்லை..? தீபாவளி பட்டாசுகளுக்கான விபத்துக்கள் மூன்று வகை! ஒன்று தயாரிக்கும் இடங்களில் நடக்கும் விபத்துகள்! ...