முப்படைத் தளபதி மறைந்துவிட்டதால், அவர் குறித்த உண்மைகளையும் சேர்த்தே மறைத்துவிட முடியாது. பிபின் ராவத் சொந்த நாட்டு மக்களை அழித்தொழிக்கும் கவுன்டர் இன்சர்ஜன்சி நடவடிக்கையில் புகழ்பெற்றவர்! ராணுவத்தின் அப்பட்டமான அத்து மீறல்களை ஆதரித்தவர்..! அகால மரணம் , விபத்து, அதையொட்டிய அனுதாபம் இயற்கையானதே! ராணுவ உடுப்பின்மீதும், ராணுவ வீரன் மீதும் மக்களுக்கு உள்ள இயல்பான ஈர்ப்பும் , மரியாதையும் ஒருவகைப்பட்டதாகும். கடமைக்காக உயிர் துறக்கும் ராணுவ வீரர்களின் தீரத்தின் மீது ஒருவித ஈர்ப்பும், மரியாதையும், அனுதாபமும் ஏற்படுகிறது. இதில் வியப்பில்லை. மலர் வளையமும், அஞ்சலியும் ...