இன்னும் எத்தனை காலம் தான் அரசு துறைகளில் எந்த ஒரு சேவை பெறுவதற்கும் கையூட்டையோ, கால தாமதத்தையோ எதிர்கொள்வது? இதற்கு முடிவுகட்ட சேவை பெறுவதை உரிமையாக்கவும், குறிப்பிட்ட காலத்திற்குள் சேவை வழங்குவதை அரசின் கடமையாக்கவுமான சட்டத்தின் தேவையை பேசுகிறது இக்கட்டுரை! அறப்போர் இயக்கம், பொதுமக்கள் 2000 பேரிடம் ஒரு இணையவழி ஆய்வு நடத்தியது. அரசுத் துறைகளின் சேவையைப் பெறும் பொழுது லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது என்று 93% பேரும், கசந்த அனுபவங்களைப் பெற்றதாக 82% பேரும், குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சூழலில்தான் சேவை பெறும் ...
21 வயது வரைக்கும் பெண்ணுக்கு திருமணம் செய்யக் கூடாது என்பது முற்போக்கு முகமுடி கொண்ட படு பிற்போக்கான சட்டம்! காதல் மணத்தை கருவறுக்கத் துடிக்கும் சாதி ஆதிக்க வாதிகளுக்கு இது சாதகமாகலாம்! சட்டவிரோத கரு கலைப்புகளை அதிகப்படுத்தலாம்… இன்னும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்..? அலசுகிறார் மஞ்சுளா! பெண்களின் திருமண வயதை உயர்த்த வேண்டும் என்று, சமதா கட்சியின் ஜெயா ஜெட்லியின் தலைமையிலான பாராளுமன்றக் குழு அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. இதுச் சட்டமானால் 21 வயதுக்கு கீழ் நடைபெறும் திருமணங்கள் குழந்தைத் திருமணம் என்று கருதப்படும். ...
சத்துணவு, அங்கன்வாடி, ரேஷன்கடை போன்ற பல திட்டங்களில் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்னோடியாகும்! நம்மைப் பார்த்து மற்ற மாநிலங்கள் பின்பற்றின. தற்போது நீட் தேர்வு எதிர்ப்பிலும் இந்தியாவிற்கே முன்னோடி முன்னோடியாக உள்ளது! ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு எதிர்த்ததை போல, தொழிலாளர் விரோத சட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்பது தமிழக தொழிற்சங்கங்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக கட்டடத் தொழிலாளர், ஆட்டோ தொழிலாளர், விவசாயத் தொழிலாளர், வீட்டுவேலை செய்பவர்களின் நலனுக்காக அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளைப் ...
சினிமாவையும் விட்டு வைக்கவில்லை பாஜக அரசு! இனிமேல் அரசியல் பேசும் சினிமாக்களையோ.., விழிப்புணர்வு தரும் சினிமாக்களையோ கற்பனை கூட செய்யமுடியாது! அப்படி ஒரு Cinematograph Act ஐ பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. எத்தனை திரைப் படைப்பாளிகளுக்கு இதை எதிர்க்கும் திரானி உள்ளது என்பதை பார்ப்போம். ஏற்கனவே இருந்த Cinematograph Act 1952 வில் இருந்த சில அம்சங்களை மாற்றி தற்போது Cinematograph Act 2021ஐ மத்திய அரசு கொண்டுவரவுள்ளது! இதன்படி சென்ஸார் போர்டு சர்டிபிகேட் தந்துவிட்டாலும் கூட ஒரு படத்தை அரசு நினைத்தால் ...
மக்களை அதிகமாக பாதிக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு தருவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது! அதன்படி அரசு நிர்வாகங்களின் சேவையை காலம் தாழ்த்தாமல் உறுதிபடுத்தும் சேவை பெறும் உரிமை சட்டம் நிறைவேற்றப்படுமா..? இந்தியாவில் சுமார் 13 மாநிலங்கள் சேவை பெறும் உரிமையை சட்டமாக்கியுள்ளன! அவை சுமார் பத்தாண்டுகளாக டெல்லி, பஞ்சாப், ஜார்கண்ட், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக தமிழ் நாட்டை ஆட்சி செய்த அதிமுக அரசு இந்த நல்ல சட்டத்தை அமல்படுத்த மறுத்துவிட்டது. 2019 ...