ஒரு பக்கம் அணி,அணியாக நடிகர், நடிகைகள்,திரைப்பட இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் சேர்கிறார்கள்! மறுபக்கம் பல மோசமான குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் சமூகவிரோதிகள் சேர்கிறார்கள்…! இந்த ஆள்பிடிக்கும் அரசியல் மூலமாக பாஜக தமிழக மக்களுக்கு தனது கட்சி குறித்த என்ன மாதிரியான தோற்றத்தை தர விரும்புகிறது…? என்ன மாதிரியான பிம்பத்தை கட்டமைக்கத் துடிக்கிறது…? ஒரு கட்சி என்ன மாதிரியான கட்சி என்பதற்கு அந்த கட்சியின் முகங்களாக இருக்கும் பிரபலங்கள் ஒரு அளவுகோலா? ஒரு இயக்கத்தின் கொள்கையில் உள்ளார்ந்த ஈடுபாடு, அதன் தலைவர் மீது மிகப் ...