‘கனவு தொழிற்சாலை’ என சினிமா இண்டஸ்டிரியைச் சொல்வார்கள்! கிரியேட்டிவான சிந்தனைகள் இந்த இண்டஸ்ரியின் முக்கிய மூலதனம்! கற்பனைகளை காசாக்கும் தொழிற்சாலை இது! ஆகவே, இதற்கு இவ்வளவு தான் விலை என்று நிர்ணயிக்க முடியாது! புத்திசாலிகள் மட்டுமே பிழைக்க முடிந்த துறையாகவும் உள்ளது! தமிழ் சினிமா வரலாற்றிலேயே இந்த ஆண்டைப் போல ஒரு சோதனையான ஆண்டை அது பார்த்திருக்காது! கொரானா சமூகத்தையே மொத்தமாக முடக்கிய நிலையில் தமிழ் சினிமாவும் அதற்கு விதிவிலக்கல்ல! மார்ச் 16 தொடங்கி, கிட்டதட்ட பத்துமாதகாலம் இந்த தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வாழ்க்கை ...