புதிய மின்சார சட்ட திருத்த மசோதா கொண்டு வரும் நோக்கமே லாபத்தை தனியாருக்கும், நஷ்டத்தை மாநில அரசுகளுக்கும் பரிசளிக்கவும் தான்! இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் மின் கட்டணங்கள் தாறுமாறாக உயரும். எளிய, நடுத்தர பிரிவு மக்களுக்கு மின்சாரம் எட்டாக் கனியாகும். அதானியின் சொத்து மதிப்பு இரட்டிப்பாகும்! ஏனென்றால், இந்தியாவிலேயே மிக அதிக தனியார் அனல் மின் நிலையங்கள் வைத்திருப்பது அதானி குழுமமே!  மகாராஷ்டிரா, குஜராத், சத்திஸ்கர், கர்நாடகா, ராஜஸ்தான்.., என பல மா நிலங்களில் அதானியின் நிறுவனங்கள் 12,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து ...

பிரிட்டிஷ்காரன் கூட இவ்வளவு பெரிய பேரழிவை தமிழகத்திற்கு 300 ஆண்டுகால ஆட்சியில் ஏற்படுத்தவில்லை! தமிழக வரலாற்றில் இதற்கு முன்பு இப்படிப்பட்ட இயற்கையை அழிக்கும் பேரழிவுத் திட்டம் அரங்கேறியது இல்லை! இதை எட்டுவழிச் சாலை திட்டம் என்பதைவிட எட்டு கோடி மக்களின் பேரழிவுத் திட்டம் என்று அழைப்பதே சரியாகும்! முதலமைச்சர் எடப்பாடி சொல்கிறார்; இதில் தமிழக மக்களில் பதினொரு சதவிகிதமானோர் தான் பாதிக்கப்படுகின்றனராம்! ’’அதற்குத் தான் இழப்பீடு தந்துவிடுகிறோமே’’ என்கிறார்! தமிழ் நாட்டை ஒரு மனிதனாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்! அந்த மனிதனின் ஒரு கால்பகுதியை முழங்கால் ...

விவசாயப் போராட்டத்திற்கான முழுமுதற் காரணிகள் அம்பானியும், அதானியும் தான்! அவர்களால் வடிவமைக்கப்பட்ட, மூன்று வேளாண் சட்டங்கள் தாம் பாராளுமன்றத்தில் அராஜகமாக பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது! அம்பானிக்கும், அதானிக்கும் சேவை செய்வதற்காகவே பாஜக அரசு தன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது என்பது கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது தான் என்றாலும், இந்த விவசாய திட்ட அமலாக்கத்தின் மூலம் அது சந்தேகமில்லாமல் நிருபிக்கப்பட்டுவிட்டது! அது தான் விவசாய சட்டங்களின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலிக்கிறது, மாநில அரசாங்கங்களின் A.P.M.C என்ற விவசாய உற்பத்தி பொருட்களின் விலையை ...