அய்யோ…அரசு பள்ளியா…! வேண்டாம் என சென்ற வருடம் வரை அலறியவர்கள் அப்பா,,அரசு பள்ளி இருக்குதே அது போதும்….என்று அடைக்கலம் தேடுகிறார்கள்..! காலச் சுழற்சி கீழிருப்பதை மேலும்,மேலிருப்பதை கீழும் தள்ளும்..! ஆனால்,இந்த செய்தி உண்மையா…? ஆங்காங்கேயுள்ள சில அரசுப் பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்ந்திருப்பது உண்மை தான்! ஆனால்,எல்லா அரசுப் பள்ளிகளிலும் அதிக மாணவர்கள் சேரவில்லை! அப்படிக் கூடுதல் மாணவர்கள் சேர்வதற்கு அரசும் அக்கரை காட்டியதாகத் தெரியவில்லை! ஏனெனில், தனியார் பள்ளிகள் கொரோனாவைப் பொருட்படுத்தாமல் ஜூன்,ஜூலையில் அட்மிஷனை தொடங்கிய போது அரசு பள்ளிகளூக்கே அனுமதியில்லாத போது ...