இன்றைய தினம் இந்தியாவில் ஒரே ஒரு கட்சி மட்டுமே அரசியல் செய்து கொண்டிருக்கின்றது! மற்ற கட்சிகள் எல்லாம் அதன் அரசியல் அசைவுகளுக்கு ஏற்ப தங்கள் அரசியலை தற்காத்துக் கொண்டு வாழ்கின்றன என்பது தான் நிஜம்! பாஜக என்ற ஒரு ஒற்றை அரசியல் இயக்கம் – ஏறத்தாழ 276 மக்கள் அமைப்புகளை மத ரீதியாக தன்னகத்தே கொண்டுள்ள – ஒரு சித்தாந்த பின்புல இயக்கம் ஒட்டு மொத்த இந்திய அரசியலை ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளது. இந்தியாவை ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஆண்ட காங்கிரஸ் இயக்கம் இன்று ...