பதவிச் சண்டை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பொதுக் குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவி பறிபோகும் என்பதை உணர்ந்த பன்னீர் அணி, கடைசி பிரம்மாஸ்த்திரமாக பொதுக் குழுவை தடுக்க கோரி காவல்துறையை நாடியுள்ளது! அதாவது, திமுக அரசின் தயவில், அதிமுக பொதுக் குழுவை தடுத்து நிறுத்தும் அளவுக்கு சென்றுவிட்டது! ”அதிமுக பொதுக் குழு நடந்தால் அதில் கலவரம் வெடிக்கும்” என பன்னீர் புகார் தருகிறார் என்றால், என்ன பொருள்? பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுக்கு எதிராக தன் ஆதரவாளர்கள் கலவரம் செய்வார்கள் என்பதற்கு அவரே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் என்று ...
அரசியலில் நல்லவர்கள் அல்ல, வல்லவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். வல்லமையை வளர்த்துக் கொண்டார் எடப்பாடி! அதே சமயம் பலவீனமானவர் என்றாலும், புறம் தள்ள முடியாதவர் பன்னீர் செல்வம்! பொதுக் குழுவில் என்ன நடக்கும்? பொதுக் குழுவிற்கு பின் அதிமுக என்னவாகும்? அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. ஒரு உறைக்குள் இரு கத்திகள் இருக்க முடியாது என்பது நிதர்சனம். ஒரு கத்தி மட்டுமே ஒரு உறைக்குள் போடவும், எடுக்கவும் சுலபமானது! ஒபிஎஸ், இபிஎஸ் இருவரும் சந்தர்ப்பவசத்தால் தலைவர்கள் ஆனவர்களே! சந்தர்ப்பவசத்தில் ...
தோல்விக்கான மனம் திறந்த சுய பரிசீலனைக்கு அதிமுகவில் யாரும் தயாரில்லை! அதிகார அரசியலில் முந்துகிறார் இ.பி.எஸ்! தற்காப்பு அரசியலுக்கான சண்டையில், சசிகலாவை கேடயமாக்குகிறார் ஒ.பி.எஸ். அந்தக் கேடயம் அவரை காப்பாற்றுமா? இல்லை, கதறடிக்குமா? ஒட்டுமொத்த கட்சியும் பொதுக் குழு கூட்டி சசிகலாவை கட்சியை விட்டு விலக்கியது! சசிகலாவை எதிர்த்து 90 சதவிகித மாவட்ட செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சசிகலா சேர்க்கை என பேச்செடுத்தாலே கட்சிக்குள் எத்தகையை கொந்தளிப்பையும், கோபத்தையும் சந்திக்க நேரும் என்று கூட ஒ.பி.எஸுக்கு நன்றாகத் தெரியும். ஆனபோதிலும், தேனி மாவட்ட நிர்வாகிகளை ...
நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜகவிடையே இணக்கம் உருவாகவில்லை. ”பாஜக அதிகம் எதிர்பார்க்கிறது” என அதிமுகவும், ”அலட்சியப் படுத்தினால் அனுபவிக்க வேண்டும் தயாரா..?” என பாஜகவும் சொல்கின்றன! என்ன நடக்கிறது? நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள் தொடர்பாக அதிமுக, பாஜக இடையேயான பேச்சுவார்த்தை நான்கு மணி நேரம் நீடித்தும் நல்ல முடிவுக்கு வர முடியவில்லை. பாஜகவை பொறுத்த வரை உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றினால் தான் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த முடியும். கட்சியில் வசதி படைத்த தொழில் அதிபர்கள், வியாபாரிகள் உள்ளூர் ...
திருவொற்றியூரில் 25 ஆண்டு கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது என்றால்…, தற்போது இரண்டரை ஆண்டுகளில் இடிந்து விழத் தயாராக இருக்கும் கே.பி.பார்க் உள்ளிட்ட பல நூறு குடியிருப்புகள் விவகாரத்தில் திமுக அரசு மெளனம் கடைபிடிப்பது ஏன்? கரப்ஷன் + கமிஷன் + கலெக்ஷன் = கழகங்கள்! எந்தக் கட்டிடமும் முறையாகக் கட்டப்பட்டால் குறைந்தபட்சம் 75 ஆண்டுகள் தொடங்கி 100 ஆண்டுகள் நிச்சயம் தாக்குப் பிடிக்கும். ஆனால், அரசு கட்டிக் கொடுக்கும் குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புகள் மட்டும் ஏன் 25 முதல் 30 ஆண்டுகளில் வாழத் தகுதியற்றுப் ...
ஜனநாயகம் என்பது பொது நலன் சார்ந்து ஒன்றுபட்டு செயலாற்றுவது! ஆனால், தன்நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட தற்குறிகளான சில சந்தர்ப்பவாதிகள் கைகோர்த்து செய்யும் சதிசெயலைத் தான் ஜனநாயகம் என்பதாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்! முதலில் தெரியாத்தனமாக நானும் கூட நம்பிவிட்டேன். அடடா, இதுவல்லவோ ஜனநாயகம்! அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரையும், துணை ஒருங்கிணைப்பாளரையும் கட்சியின் அடிப்படைத் தொண்டர்கள் தேர்ந்தெடுப்பார்களாம்! அப்படியான சட்டவிதியை தற்போது ஏற்படுத்தி உள்ளார்களாம்! பத்திரிகைகள் இது பற்றி பலவாறாக எழுதின! ”இது எடப்பாடி பழனிச்சாமியின் சர்வாதிகாரத்திற்கு வைக்கப்பட்ட செக்” என ஒரு பத்திரிகை எழுதியது. ”ஒ.பி.எஸ் ...
இரா.அன்பழகன், திருப்பரங்குன்றம், மதுரை அதிமுகவில் பிளவு ஏற்படுமா? பிளவு ஏற்பட்டால் யார் கை ஓங்கும்? கட்சி நடத்திச் செல்லும் அளவுக்கு கமிட்மெண்ட் உள்ளவரல்ல ஒபி.எஸ். தொண்டர்கள் ஆதரவுமில்லாதவர். சசிகலாவை நம்பி சென்றால் காலப்போக்கில் காணாமலாக்கிவிடுவார்கள்! கமிட்மெண்ட்டானவர் என்றாலும் தலைவனுக்கான பண்பில்லாதவர் இபிஎஸ்! சசிகலாவும், தினகரனும் தங்கள் சமுதாயம் அளவுக்கு மட்டுமே செல்வாக்குள்ளவர்கள்! ஒருவருக்கொருவர் குழிபறிக்கும் சூட்சும அரசியலில் யார் தப்ப முடியும் எனத் தெரியவில்லை! பிளவு தவிர்க்கமுடியாது என்றே தோன்றுகிறது. பிளவுக்குப் பின் அந்தக் கட்சி நீண்ட நாட்களுக்கு பிழைத்திருக்காது. எஸ்.ராதாகிருஷ்ணன், தேன்கனிக் கோட்டை, ...
காசி மாணிக்கம், திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம் ‘மோசடி செய்தவர்கள் உலகில் எங்கும் ஓடி ஒளிய முடியாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறாரே ‘ பிரதமர் மோடி? உலகில் எங்கு ஒளிந்தாலும் நடவடிக்கை எடுத்துவிடலாம் தான். பாஜகவிற்குள் ஓடி ஒளிந்து கொள்கின்றனரே! ப.சரஸ்வதி, சுங்குவார்சத்திரம், காஞ்சிபுரம் ‘கரோனா மூன்றாவது அலை ஜனவரி,பிப்ரவரியில் தொடங்க வாய்ப்பிருப்பதாக’ சுகாதாரத்துறையினர் சொல்கிறார்களே? சுகாதாரத்துறை ஜோசியத்துறையாகிவிட்டதா? இதை திட்டமிட்டு பரப்புகிறார்களா..? அல்லது பரப்புபவர்களின் குரலாக ஒலிக்கிறார்களா? செந்தில், ஜாபகர்கான்பேட்டை, சென்னை எடப்பாடி உள்ளிட்ட அதிமுக முன்னாள் மாஜிக்கள் ஆளுநரை சந்தித்துள்ளார்களே..? ஆளுநர் ...
உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றி மட்டுமல்ல, பிரமிக்கதக்க வெற்றியும் பெற்றுள்ளது! இந்த வெற்றி எப்படி சாத்தியமானது..? இந்த மிருகபல வெற்றி நியாயமானதா? இந்த வெற்றியில் அனேக அனுகூலங்கள் இருந்தாலும், சில ஆபத்துகளும் புதைந்துள்ளன! மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளை தேர்வு செய்யும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன! மொத்தமாக உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன! இதில் முக்கிய ...
நீட் விவகாரத்தில் அதிமுகவின் நிலைபாடு என்னவென்பது இன்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. ”நீட் தேர்வை நிரந்தரமாக விலக்க கோரும் மசோதாவை அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தவுடன் படபடவென்று திமுக மீது குற்றம் சுமத்திவிட்டு அதிமுக வெளி நடப்பு செய்துள்ளது! அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பேசியிருப்பதை கவனியுங்கள்; நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. அதை எதிர்த்து யாரும் செயல்பட முடியாது. மாநில அரசுகள் இதை எதிர்க்க முடியாது. ஆனாலும், நாங்கள் சட்ட போராட்டம் தொடர்ந்து ...