பாஜகவின் சடு,குடு ஆட்டம் ஆரமித்துவிட்டது! அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை இன்னும் பாஜக ஏற்கவில்லை! இதை பாஜகவின் தமிழக தலைவர்கள் எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் தொடங்கி புதிதாக கட்சிக்கு வந்த குஷ்பு வரை அனைவரும் மீண்டும், மீண்டும் கூலாகச் சொல்லி வருகிறார்கள்! ‘எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இல்லாத அதிமுக, தன்னை பெரிய பலமுள்ள கட்சியாக கருத்த முடியாது. நாங்கள் தான் உங்கள் ஊழல்களை மன்னித்து, தண்டிக்காமல் நான்காண்டுகளாக காப்பாற்றி வருகிறோம். ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற காரணத்தால், நீங்கள் கூட்டணியை கலந்து பேசாமல் முதல்வர் வேட்பாளரை அறிவித்தால் ...