அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் உக்கிரமடைந்து கொண்டிருக்கின்றன! ஒ.பி.எஸின் எதிர்காலம் என்னாகும்…?என்பது தான் அதிமுகவில் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிர்ஷ்டவசமாக ஆட்சி அதிகாரத்தை இன்னும் சுவைத்துக் கொண்டிருக்கிறது அதிமுக! ஆட்சியின் தலைமை தன்வசம் இருப்பதைப் பயன்படுத்தி இ.பி.எஸ் தன்னை வலுப்படுத்திக் கொள்வதோடு, ஒ.பி.எஸை முடிந்த அளவுக்கு அழுத்தி வருகிறார்! இதனால் இ.பி.எஸும் தானும் இரட்டையர்களாக வலம் வர நினைத்த ஒ.பி.எஸ்ஸின் எண்ணத்தில் மண் விழுந்துவிட்டதால், தன்னைத் தக்கவைத்துக் கொள்ள கடும் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் ஒ.பி.எஸ்! இலைமறைவு காய்மறைவாக நடந்து கொண்டிருந்த தலைமைக்கான யுத்தம் தற்போது நேரடியாக நடந்து வருகிறது.இதில் சமாதானத்திற்கான வெள்ளைக் கொடியை காட்டிப் பார்த்து சலிப்படைந்துவிட்டார் பன்னீர்செல்வம். ஆனால், ’’நான் ...