பிரபல ராம்ராஜ் காட்டன் நிறுவனம் திடீரென்று தமிழ் பற்றாளர்களின் கடும் கோபத்திற்கு இலக்கானது! ராம்ராஜ் காட்டனை புறக்கணிப்போம் என்ற ‘ஹேஸ்டேக்’ தேசிய அளவில் பிரபலமானது! தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேட்டியை பிரபலப்படுத்திய நிறுவனமாயிற்றே என்ன தப்பு செய்தனர் என்று பார்த்தால், அவர்கள் வேலைக்கு ஆள் எடுக்க கொடுத்திருந்த ஒரு விளம்பரத்தில் தெலுங்கு தெரிந்திருந்தால் முன்னுரிமை என விளம்பரப்படுத்தி உள்ளனர். ஆகா, இதென்ன கூத்து! ஒரு தமிழ்நாட்டு நிறுவனம் தெலுங்கு ஆளுங்களுக்கு முன்னுரிமை என்றால், தமிழ் பற்றாளர்களுக்கு கோபம் வருவது இயற்கை தானே! நியாயம் தானே! ...