பகுதி-1 தமிழகத்தில் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதா? இருக்க கூடாதா? என்ற விவாதங்கள் சமீப காலமாக வீரியமடைந்துள்ளன! கோயில் சிலைகள் மற்றும் நகைகள் அடிக்கடி காணமல் போவது, சொத்துகள் பறிபோவது,வாடகை பாக்கி வசூலிக்கப்பட முடியாமல் இருப்பது…ஆகிய காரணங்களை காட்டி..இந்துசமய அற நிலையத்துறை என்பதே அவசியமில்லை, கோயில்களை பக்தர்கள்,ஆன்மீகவாதிகள் கொண்ட குழுவிடம் தர வேண்டும் என்று சிலர் தொடர்ந்து பேசிவருகின்றனர்.அப்படியானால்,இந்து அற நிலையத் துறை என்ற ஒன்று உருவாவதற்கு முன்பு நமது கோயில்கள் எவ்வாறு பராமரிக்கப்பட்டன..? என்ற கேள்வியும், இந்து அற நிலையத்துறை ஏன் ஏற்படுத்தப்பட்டது? ...