சத்துணவு, அங்கன்வாடி, ரேஷன்கடை போன்ற பல திட்டங்களில் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்னோடியாகும்! நம்மைப் பார்த்து மற்ற மாநிலங்கள்  பின்பற்றின.  தற்போது நீட் தேர்வு எதிர்ப்பிலும் இந்தியாவிற்கே முன்னோடி முன்னோடியாக உள்ளது! ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு எதிர்த்ததை போல, தொழிலாளர் விரோத சட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்பது தமிழக தொழிற்சங்கங்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக கட்டடத் தொழிலாளர், ஆட்டோ தொழிலாளர், விவசாயத் தொழிலாளர், வீட்டுவேலை   செய்பவர்களின் நலனுக்காக   அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளைப்  ...

நாடெங்கும் விவசாயிகள் போராட்டங்கள் நடத்திவிட்டனர். டெல்லியில் வரலாறு காணாத அளவில் ஒரு நீண்ட நெடிய உழவர் போராட்டம் உறுதி குலையாமல் நடத்தப்பட்டு வருகிறது. பஞ்சாப், ராஜஸ்தான், சட்டிஸ்கர், மேற்குவங்கம், கேரளா, ஜார்கண்ட், பாண்டிச்சேரி, டெல்லி ஆகிய மாநில சட்டசபையில் ஏற்கனவே இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது! பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாளிதளம் கட்சி மத்திய அமைச்சர் பதவியைத் துறந்து கூட்டணியில் இருந்தே இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விலகிவிட்டது. இதை தொடர்ந்து தற்போது தமிழக சட்டசபையிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேறியுள்ளது. ...

தன் முனைப்பு, செயலூக்கமுள்ள தன் இயல்பால் போக்குவரத்து ஒழுங்கு, பின்பு அரசு அதிகாரிகள், காவல் துறையின் அத்து மீறலுக்கு எதிராக குரல் எழுப்பி, பிரச்சனைக்கு சட்ட வழியில் தீர்வை தேட நீதிமன்றத்தில்  வழக்காடியாகவும், பெற்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்த தடையாகவும், தாமதப்படுத்தியும், அதிகார ஆளும் தரப்புக்கு சாதகமாக இழுத்தடிப்பு செய்தும் வந்த அரசு இயந்திரங்களுக்கு எதிராகவும் போராடி அமைப்பாக இல்லாமல் தனி நபராக களத்தில், கலகக்காரராக அச்சமின்றி செயல்பட்டு, சென்னை மக்கள் மத்தியில் சமூக சேவகர் ட்ராஃபிக் ராமசாமியாக அறியப்பட்டு, ஸ்மார்ட் போன் காலத்திற்குப் பின்பு ...