போரூர் ஏரி, 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த  பரப்பளவில் தற்போது பாதி அளவு தான் உள்ளது.தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படும் இந்த ஏரியைப் பாதுகாக்க பொதுப்பணித்துறை உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று அப் பகுதி  சமூக ஆர்வலர்கள்  வருந்துகின்றனர். பல லட்சம் மக்களின் தண்ணீர் ஆதாரம் பரிதாபகரமான நிலையில் உள்ளது! சென்னை மாநகரைப் பொருத்தவரை 1970 இல் மக்கள் தொகை 30 லட்சம். இப்போது ஒரு கோடியை தாண்டிவிட்டது. சென்னை மாநகரத்தின் மக்கள் தொகை அடுத்த 50 ஆண்டுகளில் எப்படி இருக்கும்? தற்போதுள்ள  நிலைமைக்கு ஏற்ப தொலைநோக்குத் ...

பகுதி -2 தமிழக கோவில் சொத்துகளை அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும்,சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பொத்தாம்பொதுவாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தமிழக அற நிலையத்துறை ஏற்படுத்தபட்ட பிறகு தான் கோவில் சொத்துகள் பறிபோவது ஒரளவேனும் தடுக்கப்பட்டது. இல்லையெனில்,முழுவதையும் தனியார்கள் எப்போதோ ’ஸ்வாகா’ செய்திருப்பார்கள்…என்று சிலர் வாதம் வைக்கிறார்கள்! உண்மையில் கோவில் சொத்துகளை யார்,யாரெல்லாம் அபகரித்துக் கொண்டுள்ளனர், யாரெல்லாம்  சூறையாடிவருகின்றனர் என்று இந்த கட்டுரையில் தெளிவாக பார்த்துவிடலாம்! உதாரணத்திற்கு சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர் குடும்பங்கள் நீண்ட காலமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அந்த கோயிலுக்கு சொந்தமாக பல ஆயிரம் ...