விவசாய பட்ஜெட் பரவலாக மேம்போக்காக வரவேற்கப்பட்டுள்ளது! பொதுவாக நம் அரசுகளின் விவசாய பட்ஜெட் என்பது விவசாயிகளுக்கும்,வேளாண்ச் சூழலுக்கும் எதிராகவே போடப் படுகின்றன! அடிப்படை பிரச்சினைகளை அலட்சியப்படுத்தி விட்டு, அவசியமற்ற அறிவிப்புகள் செய்கின்றன..! வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படுமாம். மகிழ்ச்சி! அதே சமயம் இயற்கை வேளாண்மை கொள்கை என்ற ஒன்றையே நீங்கள் இது வரை உருவாக்கவில்லையே! அதன் அவசியத்தை இன்னும் உணரவில்லையே! இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக பசுந்தாள் உர விதைகள், மண்புழு உரம், அமிர்த கரைசல் போன்ற இயற்கை இடுபொருட்களை உற்பத்தி செய்யும் ...
விவசாயிகள் இன்று சந்திக்கும் பிரச்சினைகளை அடி முதல் நுனி வரை அதன் உண்மைத் தன்மையுடன் பேசும் படம்! 80 வயது விவசாய தாத்தா கதாநாயகனாக நம் மனதில் பதிகிறார். இயற்கையை நேசிக்க கற்றுத் தரும் படம், அதிகாரத்தின் பொய் முகங்களை அம்பலப்படுத்துகிறது! இது வரை வந்த படங்களிலேயே விவசாயத்தை இவ்வளவு உயிர்ப்பான மண் வாசனையுடன் வெளிப்படுத்திய படம் இதுவாகத்தானிருக்கும்! விவசாயம் எவ்வளவு சிக்கலானது, விவசாயிகள் எதிர்கொள்ளும் இன்னல்கள் என்னவென்பதை கவித்துவமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இது இயற்கை விவசாயம், மரபணுமாற்றுப் பயிர்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் நிலத்திற்காக செய்யப்படும் ...
நாடெங்கும் விவசாயிகள் போராட்டங்கள் நடத்திவிட்டனர். டெல்லியில் வரலாறு காணாத அளவில் ஒரு நீண்ட நெடிய உழவர் போராட்டம் உறுதி குலையாமல் நடத்தப்பட்டு வருகிறது. பஞ்சாப், ராஜஸ்தான், சட்டிஸ்கர், மேற்குவங்கம், கேரளா, ஜார்கண்ட், பாண்டிச்சேரி, டெல்லி ஆகிய மாநில சட்டசபையில் ஏற்கனவே இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது! பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாளிதளம் கட்சி மத்திய அமைச்சர் பதவியைத் துறந்து கூட்டணியில் இருந்தே இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விலகிவிட்டது. இதை தொடர்ந்து தற்போது தமிழக சட்டசபையிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேறியுள்ளது. ...