”யாரும் எதிர்க்க முடியாது. உண்மைகளை சொல்ல முடியாது. நடப்பது மாபெரும் சர்வாதிகார ஆட்சி, அடங்கிப் போவதே ஆட்சியை தக்க வைக்கும்’’ என்ற ரீதியில் சென்ற ஆட்சியாளர்கள் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும் ஆதரித்து வந்தது. இதை கண்டு சலிப்புற்று, வேதனையுற்று தமிழக மக்கள் புழுங்கிய நேரத்தில் தான் தேர்தல் வந்தது. கடந்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் கல்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். அதை சரி செய்வதற்கே புதிய ஆட்சியாளர்கள் என மக்கள் நம்பினர். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. # ...

விவசாயத்திற்கு சவாலா காலகட்டத்தில் நாம் உள்ளோம். பழைய காலத்தில் இருந்த பண்ணை அடிமைத்துவத்தை நவீன வடிவில் அமல்படுத்தவே மத்திய பாஜக அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. அந்த சட்டங்களுக்கு எதிராக ஆறு மாதங்களுக்கும் மேலாக தலை நகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள்! அந்த போராட்டத்திற்கு பகிரங்கமாக சட்டசபையில் ஆதரவு நல்கி, விவசாய பட்ஜெட் தொடங்கப்படுவதற்கு ஒரு தெளிவும்,துணிவும் வேண்டும். அதை நாம் இந்த ஆட்சியாளரகளிடம் பார்க்க முடிந்ததே ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது. அடுத்தகட்டமாக சென்ற அடிமை ஆட்சியாளர்கள் விவசாயத்திற்கு கேடு ...