இயற்கை வேளாண் விஞ்ஞானி, சூழலியல் போராளி, இயற்கை விவசாயத்தில் 30 ஆண்டுகால முன்னோடி,இயற்கை விவசாயப் பயிற்சியாளர்,எழுத்தாளர்,இதழாளர்.. என பன்முகம் கொண்டவர் பாமயன்!. தமிழகத்தின் தற்போதை விவசாயச் சூழல்கள் குறித்தும், சமீபத்திய மூன்று  வேளாண்மைச் சட்டங்கள் குறித்தும்  பீட்டர்துரைராஜுக்கு அவர் தந்த நேர்காணல். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய  வேளாண்மைச் சட்டங்கள் குறித்து்?  மத்திய பாஜக அரசானது, அதிர்ச்சிகரமான வகையில், #  உழவர் உற்பத்தி பரிமாறல் மற்றும் வணிக (ஊக்கப்பாடு, வழிகாட்டு) #  விலை உறுதிப்பாட்டில் உழவர் (அதிகாரப்படுத்தல், பாதுகாத்தல்) ஒப்பந்தம், # பண்ணைச் சேவை ...

ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், எதிர்க்கட்சிகளின் வாதங்களையும் பொருட்படுத்தாமல் அராஜகமாக வேளாண் மசோதாக்கள் இந்தியப் பாராளுமன்ற அவைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன! இவற்றால் ஏற்படவுள்ள பாதகங்களை, உருவாகப் போகும் பாதுகாப்பற்ற விவசாயச் சூழலைச் சற்றே விரிவாகப் பார்ப்போம்! இந்தியாவில் மிக அதிக அளவில் வேலை வாய்ப்புத் தரும் தொழில் விவசாயம் தான். ஆனால், விவசாயிகள் உட்பட எல்லா இந்தியர்களாலும் மட்டமாக மதிக்கப்படுவதும் விவசாயம் தான்.காரணம் விவசாயிகள் உழைப்புக்கும், விளை பொருளுக்கும் உரிய மரியாதை இல்லாமல் போனதே! ஆனால் இந்தியாவின் விவசாய வரலாறு என்பது வேறு விதமானதாக ...