விவசாயிகளுக்கு எதையெல்லாம் நிறைவேற்றித் தருவோம் என பாஜக அரசு கூறியதோ…, அவை நிறைவேற்றாமலே, நிறைவேற்றியதாகப் பொய்களை பேசி வருகிறது. உண்மையில் விவசாயிகளுக்கு ஒரளவுக்கேனும் இருந்த குறைந்தபட்ச பாதுகாப்பையும் புதிய வேளாண் சட்டங்கள் பறித்துக் கொண்டன! முக்கியமான விவசாய விளை பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை என்ற எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தி விட்டதாகவும், அது தொடரும் என்றும் பிரதமர் மோடியும் பா.ஜ.க.வும் கூறி வருவது கடைந்தெடுத்த பொய் என்பதே போராடும் விவசாயிகளின் கொந்தளிப்புக்கு காரணமாகும். மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ...