ஒரு காந்தியவாதியாய் இருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல, ஆனால் உண்மையான மாற்றத்திற்கு அவரை விட்டால் வேறு வழியில்லை. உண்மையில் அவர் ஒரு ஆன்மீக வாதி, இறை நாட்டம் அதிகம் கொண்டவர். ஆனால் இறை காட்சி வேண்டி எந்த கோவில் குளங்களுக்கும், தீர்த்த யாத்திரைக்கும் சென்றவர் அல்ல . இறைவனைத் தேடி இமயம் சென்றவரல்ல, தான் வாழும் மக்களிடையே அவர் இறைவனைக் கண்டார்! அநீதிகளற்ற அனைவருக்குமான பொதுநலனில் இறைவன் இயங்கிக் கொண்டிருப்பதாக நம்பினார் காந்தி! அவர் நம்மிடம் கேட்டதெல்லாம் எத்தகைய மாற்றத்தை நாம் வெளியில் காண ...