அதிமுகவிற்குள் நுழைவதற்கு பாஜகவின் மூலம் பல்வேறு அழுத்தங்களை செய்து பார்த்து அது தோல்வி அடைந்த நிலையில் அமமுகவை கூட்டணியாகவாவது அதிமுக கூட்டணியில் அங்கீகரிக்க வேண்டும் என சசிகலாவும், டி.டி,வி.தினகரனும் பாஜகவிடம் மன்றாடியுள்ளார்கள். இதைத் தொடர்ந்து சசிகலாவை அதிமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று அழுத்தம் தந்து வருகிறது பாஜக தலைமை. அமித்ஷா மீண்டும்,மீண்டும் எடப்பாடிக்கும்,பன்னீருக்கும் இந்த அழுத்தத்தை தொடர்ந்து தந்து வருவது அதிமுக வட்டாரத்தில் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக வட்டாரத்தில் பேசிய போது, ”பாஜகவின் அதீத தலையீடு காரணமாக கட்சியின் மேல் ...